ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
அயர்லாந்து: ஆண்ட்ரூ பால்பிர்னி (கே), ராஸ் அடேர், ஸ்டீபன் தொஹனி, ஹாரி டெக்டர், ஜார்ஜ் டோக்ரெல், கர்டிஸ் கேம்பர், நீல் ராக், மார்க் அடேர், ஃபியோன் ஹேண்ட், பெஞ்சமின் வைட், பேரி மெக்கார்த்தி.
ஜிம்பாப்வே: தடிவானாஷே மருமணி, இன்னசென்ட் கையா, கிரேக் எர்வின்(கே), வெஸ்லி மாதேவெரே, டோனி முன்யோங்கா, ரியான் பர்ல், கிளைவ் மடாண்டே, லூக் ஜாங்வே, வெலிங்டன் மசகட்சா, ரிச்சர்ட் ங்காரவா, டெண்டாய் சதாரா.