பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டவது டி20 போட்டி இன்று புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான இரு அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஜிம்பாப்வே பிளேயிங் லெவன்: பிரையன் பென்னட், தடிவானாஷே மருமணி(வ), டியான் மியர்ஸ், சிக்கந்தர் ராசா(கேட்ச்), ரியான் பர்ல், கிளைவ் மடாண்டே, தஷிங்கா முசெகிவா, வெலிங்டன் மசகட்சா, ரிச்சர்ட் நகரவா, பிளஸ்ஸிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: சைம் அயூப், உமைர் யூசுப், உஸ்மான் கான், சல்மான் ஆகா (கே), தயாப் தாஹிர், இர்பான் கான், ஜஹந்தத் கான், அப்பாஸ் அஃப்ரிடி, அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவுஃப், சுஃபியான் முகீம்