ஒரே ஓவரில் ஆறு பவுண்டரிகள்; சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்த ஜாம்பவான்கள்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்த 5 கிரிக்கெட் வீரர்களை பற்றிய சிறு தொகுப்பு..!
சர்வதேச கிரிக்கெட் நாளுக்கு நாள் புது புது விஷயங்களில் மாறிக்கொண்டே இருக்கிறது. புதிய சாதனைகள் படைக்கப்படுவதும் அதை பிந்நாளில் உடைக்கப்படுவது இங்கே வழக்கமான ஒன்றுதான்.
ஒவ்வொரு போட்டிகளில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டு அது பின்னர் உடைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட, ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் 2007இல் நடந்த தொடக்க டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் ஒரு ஓவர அடித்த ஆறு சிக்ஸர்கள் சாதனையை நினைவில் கொள்வார்கள்.
Trending
அது போல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சிலர் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 6 பவுண்டரிகளை விளாசியுள்ளனர். அதன்படி சர்வதேச போட்டிகளில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்துள்ள 5 கிரிக்கெட் வீரர்களை பற்றி இப்பதிவில் காண்போம்..
1. சந்தீப் பாட்டீல்
மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான இவர் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கியவர். அவர் விளையாடிய நாட்களில் இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பு மகத்தானது. சந்தீப் பாட்டீல் தனது பேட்டிங்கில் பலவிதமான ஷாட்டுகளை கைவசமாக கொண்டிருந்தார். இந்திய அணிக்காக இவர் 29 டெஸ்ட், 45 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் ,முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 425 ரன்களை சேர்த்திருந்தது. அதன் பின்பு களமிறங்கிய இந்தியா ஒரு கட்டத்தில் 173/6 என்ற நிலையில் இருந்தது. அச்சூழலில் களமிறங்கிய சந்தீப் பாட்டீல் திடீரென ஒரே ஓவரில் ஆறு பவுண்டரிகளை விளாசி சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் 129 ரன்களும் அடித்து அசத்தினார்.
2.கிறிஸ் கெயில்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் பிரம்மாஸ்திரம் கிறிஸ் கெய்ல். தனது அதிரடியான ஆட்டத்தின் காரணமாக இவருக்கு ரசிகர்கள் ஏராளம். அதிலும் அதிரடி மன்னனான இவர் டி20 கிரிக்கெட்டில் விளாசும் சிக்சர்களுக்கு பலர் அடிமை.
இருப்பினும், அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார், இது ஒரு சிலரை ஆச்சரியப்படுத்த கூடும். மொத்தத்தில், அவர் 7000 ரன்களை 42.19 ஆவரேஜ் விகிதத்தில் அதிர்ச்சி தரும் விதத்தில் ரன்களை குவித்துள்ளார்.
இதற்கிடையில் 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் கிறிஸ் கெய்ல் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை பறக்கவிட்டு அசத்தினார்.
3. சனத் ஜெயசூர்யா
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி இடத்தைப் பிடிப்பவர் சனத் ஜெயசூர்யா. இவர் 2007ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 6 பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.
இதன் காரணமாகவே ஜெயசூர்யா - ஆண்டர்சன் பேட்டில் என அந்த ஓவர் அழைக்கப்பட்டது. மேலும் அதற்கடுத்தடுத்த போட்டிகளிலும் ஜெயசூர்யா vs ஆண்டர்சன் என்ற எதிர்ப்பார்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கின.
4.திலகரத்னே தில்ஷன்
இப்பட்டியலில் அடுத்து பார்ப்பதும் இலங்கை ஜாம்பவான், முன்னாள் கேப்டன் திலகரத்னே தில்ஷன். இவர் இலங்கை அணிக்காக 330 ஒருநாள் போட்டிகளில் 10,290 ரன்களையும், 87 டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களையும் எடுத்துள்ளார்.
இவரது பெயர் இப்பட்டியலில் இடம் பிடித்ததற்கான சம்பவமானது, 2015 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் அரங்கேறியது.
2015ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஜான்சன் வீசிய ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை விளாசிய தில்சன், மைதானத்திலிருந்து வீரர்களைத் தவிர்த்து மொத்த மைதானத்தையும் அலற வைத்தார்.
மேலும் உலகக்கோப்பை தொடரில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது கூடுதல் சிறப்பு.
5. ராம்நரேஷ் சர்வன்
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ராம் நரேஷ் சர்வன். இவர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இச் சாதனையை நிகழ்த்தினார்.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேல் வீசிய ஓவரின் ஆறு பந்துகளையும் பவுண்டரிகளுக்கு விளாசி அசத்தினார்.
Win Big, Make Your Cricket Tales Now