
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் இரு தினங்களில் நடைபெறவுள்ள நிலையில், தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கு இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று உலகக்கோப்பையை கைகளில் ஏந்தும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் என உலகக்கோப்பை வென்ற அணிகள் ஆதிக்கம் செலுத்தும் என முன்னாள் வீரர்கள் கணித்துள்ள நிலையில், 1992ஆம் ஆண்டு கோப்பையையும், 2011 ஆண்டு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ள இலங்கை அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதே நிதர்சனம்.
ஏனெனில் சமீப கால ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் ஆதிக்கம் 14 போட்டிகளில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் இருந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அந்த அணிக்கு பேரிடியை இறக்கியது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அதுவரை சிறப்பாக செயல்பட்டு வந்த அணி, இறுதிப்போட்டியில் சொற்ப ரன்களுக்கு ஆல் அவுட்டானது அணியின் அனுபமின்மையை காட்டுக்கிறது.