
சின்ன வயசுல 10 ரூபாய்க்கு ஒரு ரப்பர் பந்து வாங்கி, பசங்களோட சேந்து அந்த பந்தை நாலே மேட்ச்ல நாறு நாறாக கிழித்து, வாரத்துக்கு 3, 4 ரப்பர் பந்து வாங்கி விளையாடுவோம். நம்ம ஊரில், வயல் வரப்பில் விளையாட ரப்பர் பந்து போதும்.
ஆனால், அங்கு கூக்கபுரா பந்தை வைத்து விளையாட முடியும்? டியூக் பந்தை வைத்து விளையாட முடியும்? எஸ்ஜி பந்தை வைத்து விளையாட முடியும்? இதெல்லாம், அப்போவே தெரியாம போச்சு. தெரிஞ்சிருந்தா, அந்த பந்தையும் வாங்கி பசங்களோட ஒரு கை பாத்திருப்போம்.
ஆனா என்ன வாரத்துக்கு 3 பந்து வாங்குவதற்கு பதிலாக, 3,4 பேட் தான் வாங்கியிருக்கோனும். அட விஷயத்துக்கு வருவோம்… பல வருஷமா கிரிக்கெட் பார்க்குறோம். ஆனா, கிரிக்கெட்ல என்ன பந்து யூஸ் பண்றாங்க-னு கேட்டா, ‘டி20, ஒன்டே மேட்சுக்கு எல்லாம் வெள்ளை கலர் பந்து, டெஸ்ட் மேட்சுக்கு சிவப்பு பந்து, இப்போ ரோஸ் கலர் பந்து யூஸ் பண்ணுவாங்க’ என்ற வரையில் தான் நமக்கு தெரியும்.