உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்தியா vs நியூசிலாந்து - வெல்வது யார்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் வெற்றி வாகையை சூடப்போவது யார்? இந்தியா vs நியூசிலாந்து.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதி போட்டி இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்டன் நகரில் ஜூன் 18 முதல் ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
இதற்காக இரு அணிகளும் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்து சுருக்கமாக காண்போம்..!
Trending
வேகப்பந்து வீச்சு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இரு அணிகளுக்கும் பொதுவான இடத்தில் நடத்தப்படுகிறது. போட்டி நடைபெறும் இங்கிலாந்து மைதானங்கள் பொதுவாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வையாகும். இதனால் இரு அணிகளிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சில் சற்று பின்னடைவை சந்திக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். ஏனெனில் பும்ரா, முகமது ஷமி ஆகியோரை மட்டுமே நம்பியுள்ளது. மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் இடம் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசயம் நியூசிலாந்து அணியை பொறுத்தவரை ட்ரெண்ட் போல்ட், நெய்ல் வாக்னர், மேட் ஹெண்ட்ரி, கெய்ல் ஜெமிசன், டிம் சௌதி ஆகியோர் இருப்பது அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. மேலும் கடந்த சில ஆண்டுகளில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஃபார்மில் இருப்பது அணிக்கு கூடுதல் பலத்தை வழங்குகிறது.
பேட்டிங் வரிசை
இரு அணி பேட்டிங் வரிசையை பொறுத்தவரையில் சமபலத்துடனே இருக்கின்றன. இதில், இந்திய அணியின் ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோருடன் ரிஷப் பந்த், அஸ்வின், ஜடேஜா ஆகியோரும் சிறப்பான ஃபார்மில் இருப்பது அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.
நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், டேவன் கான்வே, டேரி மிட்சல் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இருப்பது அணிக்கு சற்று நம்பிக்கையை வழங்கிறது. இருப்பினும் பும்ரா, ஷாமி ஆகியோருக்கு முன்னாள் இவர்களால் சமாளிக்க முடியுமா என்ற சந்தேகத்தை கூட்டுகிறது.
மிடில் ஆர்டர் வரிசை
இரு அணிகளிலும் உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர்கள் இருப்பது இரு அணிகளுக்கும் பலமாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருடன் வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் இருப்பதும் எதிரணிக்கு நிச்சயம் தலைவலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதெற்கென நியூசிலாந்தை குறைத்து மதிப்பிட முடியாது. மிட்செல் சாண்ட்னர், காலின் டி கிராண்ட்ஹோம், டரில் மிட்செல் ஆகியோரும் இந்திய அணிக்கு சவாலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now