Advertisement
Advertisement

ஐபிஎல் 2022: அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் எந்த பிளெயிங் லெவனை தேர்வு செய்யும் என்பது குறித்த ஒரு முன்னோட்டத்தைப் இப்பதிவில் காண்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 14, 2022 • 19:35 PM
What Can Be The Likely Playing XIs Of Franchises In Their 1st Match Of IPL 2022?
What Can Be The Likely Playing XIs Of Franchises In Their 1st Match Of IPL 2022? (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் கடந்த இரண்டு நாள்களாக பரபரப்புடன் நடைபெற்று முடிவடைந்தது. இந்த முறை மொத்தமாக 204 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில் 67 அயல்நாட்டு வீரர்கள் ஆகும். மொத்தமாக ரூ. 551.70 கோடிக்கு ஏலம் போயுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஏலத்தின் மூலம் அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களது வலிமையான அணியை உருவாக்கியுள்ளனர். அப்படி ஒவ்வொரு அணியும் தேர்வு செய்த வீரர்களைக் கொண்டு போட்டிகளுக்கு தேவையான பிளேயிங் லெவனை உருவாக்கவுள்ளனார்.

Trending


அதன்படி வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் எந்த பிளெயிங் லெவனை தேர்வு செய்யும் என்பது குறித்த ஒரு முன்னோட்டத்தைப் இப்பதிவில் காண்போம்.


சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, ஷிவம் துபே, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஆர் ஹங்கர்கேகர், டுவைன் பிராவோ, ஆடம் மில்னே.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஃபாஃப் டு பிளெசிஸ், அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.

மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா/சஞ்சய் யாதவ், டிம் டேவிட், கீரன் பொல்லார்ட், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், முருகன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ்/ டேனியல் சாம்ஸ்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்- பிருத்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த், சர்ஃபராஸ் கான், ரோவ்மேன் பவல், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், லலித் யாதவ்/குல்தீப் யாதவ், ஆன்ரிச் நோர்ட்ஜே, கமலேஷ் நாகர்கோட்டி/கலீல் அகமது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கேஎல் ராகுல், குயின்டன் டி காக், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜேசன் ஹோல்டர், குர்னால் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், ஆவேஷ் கான், மார்க் வூட், ரவி பிஷ்னோய்.

பஞ்சாப் கிங்ஸ் - ஷிகர் தவான், மயங்க் அகர்வால், ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், ரிஷி தவான்/ராஜ் பாவா, ஷாருக் கான், ஒடியன் ஸ்மித், ககிசோ ரபாடா, ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், சிவம் மவி/உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஐடன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்ட், ஸ்ரேயாஸ் கோபால், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

ராஜஸ்தான் ராயல்ஸ் - ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன், ஷிம்ரோன் ஹெட்மையர், ரியான் பராக், ஜேம்ஸ் நீஷம், ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா, டிரெண்ட் போல்ட்.

குஜராத் டைட்டன்ஸ் - ஜேசன் ராய், விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, டொமினிக் டிரேக்ஸ், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், சாய் கிஷோர், லாக்கி பெர்குசன், முகமது ஷமி.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement