எஸ்ஆர்எச்-ன் அன்பையும் ஆதரவையும் என்றென்றும் என்னுடன் வைத்திருப்பேன் - புவனேஷ்வர் குமார்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் 11 ஆண்டுகள் ஒன்றாக பயணித்த பிறகு, நான் தற்போது அந்த அணியில் இருந்து விடைபெறுகிறேன் என வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த நவம்பர் 24, 25ஆம் தேதி சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு ஏல்ம் நடத்தப்பட்டது. இதனால் எந்தெந்த வீரர்கள் எவ்வளவு தொகைக்கு ஏலம் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன.
அந்தவகையில் நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர். அதேசமயம் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்பட்ட டேவிட் வார்னர், பிரித்வி ஷா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
Trending
மேலும் 13வயதே ஆன இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக இளம் வயதில் விளையாடும் வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். இப்படி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்துள்ள வீரர்கள் ஏலத்தில் பல்வேறு அணிகளின் முக்கிய வீரர்களாக பார்க்கப்பட்ட பலரும் வெறு அணிக்காக இம்முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளனர். அந்தவகையில் சன்ரைசர்ஸ் ஹைதாரபாத் அணிக்காக கடந்த 11 ஆண்டுகளாக விளையாடி வந்த புவனேஷ்வர் குமார் இம்முறை ஆர்சிபி அணிக்காக விளையாடவுள்ளார்.
After 11 incredible years with SRH, I say goodbye to this team.
I have so many unforgettable and cherishable memories.
One thing unmissable is the love of the fans which has been splendid! Your support has been constant.
I will carry this love and support with me forever pic.twitter.com/SywIykloHp— Bhuvneshwar Kumar (@BhuviOfficial) November 28, 2024இந்நிலையில் ஹைதாராபாத் அணியில் இடம்பிடிக்காதது குறித்தும், ஆர்சிபி அணிக்காக விளையாடவுள்ளது குறித்தும் புவனேஷ்வர் குமார் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய புவனேஷ்வர் குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் 11 ஆண்டுகள் ஒன்றாக பயணித்த பிறகு, நான் தற்போது அந்த அணியில் இருந்து விடைபெறுகிறேன். அந்த அணியுடனும், அங்குள்ள பயிற்சியாளர்கள், உரிமையாளர்கள் மற்றும் வீரர்களுட்ன் எனக்கு பல மறக்க முடியாத நினைவுகள் உள்ளன. மேலும் அங்குள்ள ரசிகர்களின் அன்பு அபாரமானது. இந்த அன்பையும் ஆதரவையும் என்றென்றும் என்னுடன் வைத்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் விளையாடிய புவனேஷ்வர் குமார் 145 போட்டிகளில் விளையாடி 167 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அதேசமயம் ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் 176 போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார் 181 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் தான் தற்சமயம் நடந்து முடிந்த ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் புவனேஷ்வர் குமாரை ஏலத்தில் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now