இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கிரஹாம் ரீட் விலகல்!
ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் இந்த தோல்விக்கு பிறகு தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கிரஹாம் ரீட் விலகி உள்ளார். உலகக் கோப்பை தொடர் நேற்று முடிந்த நிலையில் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.
ஹாக்கி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவிலுள்ள ஒடிசாவில் நடைபெற்றது. இந்த தொடரில் ஜெர்மனி அணி பெல்ஜியம் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. நடப்பு ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 9ஆவது இடத்தை பிடித்தது.
குரூப் சுற்றில் இரண்டாவது இடம் பிடித்த இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியான கிராஸ்ஓவர் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இத்தொல்வியின் எதிரொளியாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். மேலும், இந்திய அணியின் அனலிட்டிக்கல் பயிற்சியாளர் கிரெக் கிளார்க் மற்றும் ஆலோசகர் மிட்செல் டேவிட் பெம்பர்டன் ஆகியோரும் தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகி உள்ளனர்.
இதுகுறித்து பேசிய கிரஹாம் ரீட், “எனது பொறுப்பை அடுத்து வரும் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது என கருதுகிறேன். இந்திய அணி மற்றும் ஹாக்கி இந்தியாவுடனான இணைந்து பணியாற்றியதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன். இந்த பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்வுடன் அனுபவித்தேன். அணிக்கு எனது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now