PKL 2023: பாட்னா பைரேட்ஸ், யுபி யோத்தாஸ் அபார வெற்றி!
புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற இருவேறு லீக் போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் யுபி யோத்தாஸ் அணிகள் வெற்றிபெற்று அசத்தியது.
இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது இதில் நேற்று ஆஹ்மதாபாத்தில் நடந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளைப் பெற்று அசத்தியது. இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாட்னா அணி 28 - 16 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அபாரமாக செயல்பட்ட பாட்னா அணி அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற, மறுபக்கம் தலுங்கு டைட்டன்ஸ் அணி தடுமாறியது. இதனை சரியாக பயன்படுத்திய பாட்னா அணி இறுதிவரை அபாரமாக செயல்பட்டு 50-28 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
அதேபோல் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் யுபி யோத்தாஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஏற்கனவே விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை தழுவிய யுபி யோத்தாஸ் அணி, தனது இரண்டாவது போட்டியான இன்று ஹரியானா அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதனால் போட்டி முடிவில் யுபி யோத்தாஸ் அணி 57-27 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. 30 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்த யுபி யோத்தாஸ் அணி, 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. ஹரியானா முதல் போட்டியில் 30 புள்ளிகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியிருப்பதால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now