PKL 2023: யு மும்பாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது குஜராத் ஜெயண்ட்ஸ்!
யு மும்பா அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் 39 - 37 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
12 அணிகள் பங்கேற்றுள்ள வரும் 10ஆவது புரோ கபடி லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் - யு மும்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் தொடக்கத்திலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யு மும்பா அணி அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்று முன்னிலைப் பெற்றது.
அதற்கேற்றவாரு குஜராத் அணியும் நெருக்கடி கொடுத்து மும்பை அணிக்கு தலைவலியைக் கொடுத்தது. இருப்பினும் முதல் பாதி ஆட்டநேர முடிவில் யு மும்பா அணி 18-16 என்ற புள்ளிகணக்கில் முன்னிலையைப் பெற்றது. இதையடுத்து தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தில் சூதாரித்து விளையாடிய குஜராத் அணி அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்று ஆட்டத்தில் முன்னிலை பெற்றது.
பின்னர் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைப் பெற எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே தொற்றிக்கொன்றது. இருப்பினும் இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 39 - 37 என்ற புள்ளிகணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோனு ஜக்லான் 11 புள்ளிகளையும், ரோஹித் குலியா 7 புள்ளிகளையும், ராகேஷ் 9 புள்ளிகளையும் கைப்பற்றி குஜராத் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு புரோ கபடி லீக் தொடரில் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்று 15 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலித்தில் உள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now