Advertisement
Advertisement
Advertisement

PKL 2023: ஜெய்ப்பூரை வீழ்த்தி புனேரி அசத்தல் வெற்றி; பெங்களூருக்கு அதிர்ச்சி கொடுத்த பெங்கால்!

புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஜெய்ப்பூர் பங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பல்தான் அணியும், பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணியும் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan December 05, 2023 • 11:57 AM
PKL 2023: ஜெய்ப்பூரை வீழ்த்தி புனேரி அசத்தல் வெற்றி; பெங்களூருக்கு அதிர்ச்சி கொடுத்த பெங்கால்!
PKL 2023: ஜெய்ப்பூரை வீழ்த்தி புனேரி அசத்தல் வெற்றி; பெங்களூருக்கு அதிர்ச்சி கொடுத்த பெங்கால்! (Image Source: Google)


12 அணிகள் பங்கேற்றுள்ள வரும் 10ஆவது புரோ கபடி லீக் தொடர் குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் சனிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கிய போட்டியில் புனேரி பல்டன் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதியது.

தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் புள்ளிகள் இரு அணிகளும் சமமாக பெற்றன. ஆனாலும், இறுதியில் புனேரி பல்தான் அணி 37-33 என்ற புள்ளி கணக்கில், ஜெய்ப்பூர் பின்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.

புனேரி அணி தரப்பில், அஸ்லாம் 10 புள்ளிகளும், மொஹித் 8 புள்ளிகளும், செய்னிஹா 5 புள்ளிகளும் எடுத்தனர். ஜெய்ப்பூர் அணி தரப்பில் அர்ஜூன் தேஷ்வால் 17 புள்ளிகள் எடுத்திருந்தாலும் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றியை தவறவிட்டது.

தொடர்ந்து, இரவு 9 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதியது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றதால் இந்த ஆட்டம் சமநிலையில் சென்றது. ஆனாலும் இறுதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 32-30 என்ற புள்ளி கணக்கில் பெங்களுரு புல்ஸ் அணியை வீழ்த்தியது. 

பெங்கால் அணி தரப்பில் அதிகபட்சமாக மணிந்தர் சிங் 11 புள்ளிகள் எடுத்தார். பெங்களூரு அணி தரப்பில் பரத் அதிகபட்சமாக 6 புள்ளிகள் எடுத்தார். இரு அணிகளும் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், 2 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது. 


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement