
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முன்னணி டென்னிஸ் வீரர்களும் பலரும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ரஃபேல் நடாலும், அமெரிக்க வீரர் மெக்டொனால்டும் இன்று இரண்டாவது சுற்று ஆட்டத்தில் மோதினர்.
பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் மெக்டோனல்டிடம் பறிகொடுத்தார் நடால். இதையடுத்து இரண்டாவது செட்டையும் 4-6 என்ற கணக்கில் மெக்டோனல்டு போராடி வெற்றிபெற்றார். வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டம் பரப்பாக இருந்தது. அந்த செட்டையில் 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார் மெக்டொனால்ட்.
இதன்மூலம் மெக்டொனால்ட் 6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் ரஃபேல் நடாலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். முன்னதாக, முதல் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் டிராப்பரை 7-5, 2-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியிருந்தார் நடால்.