
All England Open Badminton: HS Prannoy, Lakshya Sen Advance (Image Source: Google)
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடப்பாண்டிற்கான ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹச்.எஸ்.பிரனாய், சீன தைபேவின் ஸூ வெய் வாங்கை எதிர்த்து விளையாடினார்.
பரபரப்பாக நடைப்பெற்ற இப்போட்டியின் முதல் செட்டை பிரனாய் 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய பிரனாய் 22-20 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
மொத்தம் 49 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹச்.எஸ். பிரனாய் 21-19, 22-20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து, இரண்டாவது சுற்றில் தாய்லாந்தின் அந்தோணி சினிசுகா ஜின்டிங்குடன் மோதுகிறார் .