ஆல் இங்கிலாந்து ஓபன்: முதல் சுற்றிலேயே வெளியேறினார் பிவி சிந்து!
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடப்பாண்டிற்கான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவுமுதல் சுற்றில் 9ஆம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, 17ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் ஜாங் யிமானை எதிர்த்து விளையாடினார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் பிவி சிந்து முதல் செட்டை 17- 21 என்ற கணக்கில் இழந்தார். அதன்பின் நடைபெற்ற இரண்டாவது செட்டிற்கான ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய ஜாங் யிமான் 21-11 என்ற கணக்கில் கைப்பற்றி சிந்துவிற்கு அதிர்ச்சியளித்தார்.
மொத்தம் 39 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிவி சிந்து 17-21, 11-21 என்ற நேர் செட் கணக்கில் ஜாங் யிமானிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். அதேசமயம் மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-18,21-14 என்ற நேர் செட்டில் தாய்லாந்தின் ஜோங்கோல்பன் கித்தரகுல், ரவின்டா பிரஜோங் ஜெய் ஜோடியை வீழ்த்தி 2ஆவது சுற்றுக்கு முன்னேறியது.
Win Big, Make Your Cricket Tales Now