
கத்தார் நாட்டில் 22ஆவது உலக கோப்பை கால்பந்து திருவிழா வருகிற 20ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை நடக்கிறது. கத்தாரில் உள்ள தோகா, அல் கோர், லுசைல், அல் ரையான், அல் வக்ரா ஆகிய 5 நகரங்களில் உள்ள 8 மைதானங்களில் போட்டி அரங்கேறுகிறது.
அரபு நாட்டில் முதல்முறையாக நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முந்தைய நாக்-அவுட் (ரவுண்ட் 16) சுற்றுக்கு தகுதி பெறும்.
இதில் அர்ஜென்டினா அணி 'சி ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. அர்ஜென்டினா 2 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் ஜெர்மனி அணியிடம் தோல்வி அடைந்தது. உலகின் மிக பலம் வாய்ந்த அணியாக அர்ஜென்டினா கருதப்படுகிறது.