
Arjun Deshwal, Rahul Chaudhari star as Jaipur Pink Panthers beat Dabang Delhi (Image Source: Google)
புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று புனேவில் 3 போட்டிகள் நடந்தன. நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸும் யு.பி யோதாஸும் மோதின.
கடந்த போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்ற யு.பி யோதாஸ் அணி இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடியது. இதன்மூலம் ஆட்டநேர முடிவில் யுபி யோதாஸ் அணி 41-30 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதையடுத்து நேற்று நடந்த கடைசி போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸும் தபாங் டெல்லியும் மோதின. இந்த போட்டியில் டபாங் டெல்லி மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி அபாரமாக ஆடியது ஜெய்ப்பூர் அணி. டபாங் டெல்லி அணியால் ஒரு கட்டத்தில் கூட ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.