Advertisement

ஆஸ்திரேலிய ஓபன் 2023: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ரஃபேல் நடால்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan January 16, 2023 • 19:11 PM
Aus Open: Nadal Wins Hard-fought Battle Against Draper To Begin His Title Defence
Aus Open: Nadal Wins Hard-fought Battle Against Draper To Begin His Title Defence (Image Source: Google)

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நடப்பாண்டு சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இன்று முதல் வருகிற 29ஆம் தேதி வரை நடக்கும் இந்த டென்னிஸ் திருவிழாவில் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கிறார்கள்.

கடந்த ஆண்டு கரோனா தடுப்பூசி போடாத விவகாரத்தால் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படாமல் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட முன்னாள் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இந்த சீசனில் விளையாட உள்ளார். அவர் கோப்பையை வெல்லும் பட்சத்தில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயினின் ரஃபெல் நடாலை (22 கிராண்ட்ஸ்லாம்) சமன் செய்து விடுவார். 

இந்நிலையில், நடப்பு சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரஃபெல் நடால் தனது முதல் சுற்றில் இங்கிலாந்தின் ஜாக் டிராபரை இன்று சந்தித்தார். ரஃபேல் நடாலுக்கு கடுமையான போட்டி கொடுத்தார் ஜாக் டிராபர். சுமார் 3 1/2 மணி நேரம் நீடித்த இந்த மோதலில் ரஃபெல் நடால் 7-5, 2-6, 6-4, 6-1 என்ற புள்ளி வித்தியாசத்தில் போராடி வெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் இரன்யாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement