
Australian Open 2023: Sania Mirza-Rohan Bopanna pair reaches mixed doubles pre-quarterfinals (Image Source: Google)
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தொடர் கடந்த 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29ஆம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் , இந்தியாவின் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி - ஆஸ்திரேலியாவின் ஜெய்மீ போர்லிஸ்- லூக் சேவில்லே ஜோடியை எதிர்கொண்டது.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சானியா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றியது. அதன்பின் நடைபெற்ற இரண்டாம் செட் ஆட்டத்திலும் ஆபாரமாக செயல்பட்ட சானியா இணை 6-3 என்ற கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றி அசத்தியது.