
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் 18ஆம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவ், 29ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் செபஸ்டியன் கோர்டாவை எதிர்த்து விளையாடினார்.
இதில் கரேன் கச்சனோவ் 7-6 (7-5), 6-3, 3-0 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்த போது செபஸ்டியன் கோர்டாவுக்கு வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், ஆட்டத்தில் இருந்து விலகினார். இதனால் கரேன் கச்சனோவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 3ஆம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-3, 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் 71ஆம் நிலை வீரரான செக்குடியரசின் ஜிரி லெஹெக்காவை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.