ஆஸ்திரேலியன் ஓபன்: காஸ்பர் ரூட்டிற்கு அதிர்ச்சி கொடுத்த ஜென்சன் புரூக்ஸ்பை!
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இரண்டாம் சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பை தரவரிசையில் 2ஆம் நிலை வீரரான் காஸ்பர் ரூடை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29ஆம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், ஆடவர் ஒற்றையர் 2ஆவது சுற்று போட்டி ஒன்றில் அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பை மற்றும் தரவரிசையில் 2ஆம் நிலை வீரரான காஸ்பர் ரூட் ஆகியோர் இன்று விளையாடினர்.
இந்த போட்டியில், அதிரடியாக விளையாடிய ஜென்சன் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்து நடைபெற்ற இரண்டாம் செட் ஆட்டத்தில் காஸ்பர் ரூட் 7-6 என்ற கணக்கில் போராடி கைப்பற்றினார்.
அதன்பின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாம் செட் ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட ஜென்சன் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி ரூடிற்கு அதிர்சி கொடுத்தார். இதன் மூலம் ஜென்சன் புரூக்ஸ்பை 6-3, 6-7, 6-2 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூடை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதனால், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீரர்களின் ஆதிக்கம் நீடிக்கிறது. கலிபோர்னியாவை சேர்ந்த 22 வயதுடைய ஜென்சன், 2ஆவது நிலை வீரரை இன்று வீழ்த்தியது போன்றே, இதே டென்னிஸ் கோர்ட்டில் நேற்று நடந்த போட்டியில் மற்றொரு அமெரிக்க வீரரும் சாதனை படைத்து உள்ளார்.
27 வயது கொண்ட அமெரிக்காவின் மெக்கன்ஸி மெக்டொனால்டு, நடப்பு சாம்பியன் ரபேல் நடாலுடன் இரண்டாம் சுற்று போட்டியில் எதிர் கொண்டு விளையாடினார். மோத்தம் 2 மணி நேரம் 32 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் 4-6, 4-6, 5-7 என்ற செட் கணக்கில் நடாலை, மெக்கன்ஸி வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now