ஆஸ்திரேலியன் ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நோவாக் ஜோகோவிச்!
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் அசத்தியுள்ளார்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29ஆம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3ஆவது சுற்று போட்டியில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் , பல்கேரியா நாட்டை சேர்ந்த கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 7-6 ,6-3, 6-4 என்ற செட் கணக்கில் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நோவாக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now