
Australian Open: Murray Stages Stunning Comeback To Beat Kokkinakis In A Five-set Thriller (Image Source: Google)
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, ஆஸ்திரேலியாவின் தனாசி கோகிநாகிசுடன் மோதினார்.
இப்போட்டியில் 6-4, 6-7 என்ற கணக்கில் முதலிரு செட்டை தனாசி கோகிநாகிசு கைப்பற்றி முர்ரேவுக்கு அதிரச்சி கொடுத்தார். பின்னர் சூதாரித்த ஆண்டி முர்ரே மூன்றாவது செட்டை 7-6 என்ற கணக்கிலும், நான்காவது செட்டை 6-3 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி சுற்று ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட ஆண்டி முர்ரே 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.