
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலகின் 3ஆம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், 4ஆம் நிலைவீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி சிட்சிபாஸிற்கு அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் சிட்சிபாஸ் கடுமையாக் போராடிய நிலையிலும் 6-7 என்ற கணக்கில் ஜோகோவிச்சிடம் அந்த செட்டையும் இழந்தார்.
அதன்பின் நடைபெற்ற வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டமும் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்றது. இதில் ஜோகோவிச் 7-6 என்ற கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் நோவாக் ஜோகோவிச் 6-3, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி, ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.