Advertisement

ஆஸ்திரேலியன் ஓபன்: சானியா - போபண்ணா இணை அதிர்ச்சி தோல்வி!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் சானியா - போபண்ணா அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan January 27, 2023 • 12:09 PM
Australian Open: Sania Mirza Bids Adieu To Grand Slam Career As Runner-up In Melbourne
Australian Open: Sania Mirza Bids Adieu To Grand Slam Career As Runner-up In Melbourne (Image Source: Google)

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் முன்னனி வீராங்கனை சானியா மிர்ஸாவும், ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடினர்.

இந்த இணை கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்தில் டெசிரே க்ராவ்சிக் மற்றும் நீல் ஸ்குப்ஸ்கி இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1 மணி 52 நிமிடங்கள் நீடித்தது. இறுதியாக டெசிரே க்ராவ்சிக் மற்றும் நீல் ஸ்குப்ஸ்கி இணையை சானியா மிர்ஸா, ரோகன் போபண்ணா ஜோடி 7-6(5), 6-7, 10-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிபோட்டி இன்று நடைபெற்றது.

கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா - போபண்ணா இணை, பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரபேல் மாடோஸ் இணையை எதிர்கொண்டது. கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி என்பதால் வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்ற கனவில் போபண்ணாவுடன் இணைந்து களமிறங்கினார் சானியா.

இருவரும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், எதிரில் விளையாடிய லூயிசா ஸ்டெபானி மற்றும் ரபேல் மாடோஸ் இணை தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் செட்டில் இருவருமே ஆரம்ப முதலே சிறப்பாக விளையாடினர்.

இறுதியில் 6-7 (2), 2-6 என்ற புள்ளிகள் கணக்கில் லூயிசா ஸ்டெபானி - ரபேல் மாடோஸ் இணை கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. அதேநேரத்தில், கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி என்பதால் வெற்றி பெற வேண்டும் என்ற கணவில் இருந்த சானியா மிர்சாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதனால், கண்ணீருடன் சர்வதேச டென்னிஸ் கிராண்டஸ்லாம் போட்டிகளுக்கு விடை கொடுத்தார். அவருக்கு அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி, வாழ்த்து தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் டென்னிஸ் ரசிகர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement