
Australian Open: Sania Mirza-Rohan Bopanna Pair Advances To Mixed Doubles Quarterfinals (Image Source: Google)
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்றில் தோல்வியடைந்த இந்தியாவின் சானியா மிர்சா, கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து விளையாடி வருகிறார்.
இதில் இன்று நடைபெற்ற 2ஆவது சுற்றில் சானியா மிர்சா - போபண்ணா ஜோடி உருகுவே நாட்டைச் சேர்ந்த பெஹர் - ஜப்பானைச் சேர்ந்த நினோமியா ஜோடியை எதிர்கொண்டனர்.
இப்போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சானியா இணை 6-4 7-6 என்ற நேர் செட்கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியன் ஓபன் கலப்பு இரட்டையர் காலிறுதி ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.