ஆஸ்திரேலியன் ஓபன் 2023: இறுதிப்போட்டியில் சானியா - போபண்ணா இணை!
தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடி வரும் பிரபல வீராங்கனை சானியா மிர்சா, ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆண்டின் முதல் கிரான்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் விறுவிறுபக் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் 2ஆவது சுற்றில் தோல்வியடைந்த இந்தியாவின் சானியா மிர்சா, கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து விளையாடி வருகிறார்.
காலிறுதிச்சுற்றில் சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி, லட்வியா - ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த ஜோடியுடன் மோதுவதாக இருந்தது. ஆனால் இந்த ஆட்டத்திலிருந்து அவர்கள் விலகியதால் சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி சிரமம் இன்றி அரையிறுதிக்கு முன்னேறியது.
இதையடுத்து இன்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி, அமெரிக்க, இங்கிலாந்து ஜோடியான டிசிரே - ஸ்குப்ஸ்கியை எதிர்கொண்டது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சானியா இணை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி ஆசத்தியது.
இடையடுத்து நடைபெற்ற இரண்டாம் செட் ஆட்டத்தில் கம்பேக் கொடுத்த டிசிரே இணை 7-6 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி அசத்தினர். அதன்பின் போட்டியில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி செட் ஆட்டத்தில் கடுமையாக போராடிய சானியா இணை 10-6 என்ற கணக்கில் கைப்பற்றி டிசிரே இணையை வீழ்த்தியதி.
இதன்மூலம் சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா இருவரும் ஆஸ்திரேலியன் ஓபன் கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்கள். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்று ஆட்டம் 5 வருடங்களுக்குப் பிறகு இந்தியரின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது. முன்னட்தாக கடந்த 2018ஆம் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு போபண்ணா முன்னேறினார். ஆனால் அதில் அவர் தோல்வியடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now