Advertisement

ஆஸ்திரேலியன் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நான்காம் நிலை வீரரான ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் வெற்றிபெற்று காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan January 23, 2023 • 12:31 PM
Australian Open: Tsitsipas Overcomes Sinner To Reach Quarterfinals
Australian Open: Tsitsipas Overcomes Sinner To Reach Quarterfinals (Image Source: Google)

ஆண்டின் முதல் ஓபன் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியாவின் ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 4ஆம் நிலையில் உள்ள ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ், இத்தாலியின் ஜானிக் சினெரை எதிர்கொண்டார். 

இவர்கள் இவருக்கும் இடையேயான இந்த போட்டியானது சுமார் 4 மணி நேரம் நீடித்தத்து. இதில் முதலிரு செட்களை 6-4, 6-4 என்ற கணக்கில் சிட்சிபாஸ் கைப்பற்ற, அடுத்த செட்டையும் கைப்பற்றி எளிதாக வெற்றியை ஈட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அனைவரது எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கும் வகையில் ஜானிக் சினெர் அடுத்தடுத்த இரு செட்களையும் 6-3, 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி சிட்சிபாஸிற்கு அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து நடைபெற்ற வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி செட்டில் சூதாரித்து விளையாடிய சிட்சிபாஸ் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். 

இதன்மூலம் சிட்சிபாஸ் 6-4, 6-4, 3-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜானிக் சினெரை வீழ்த்தி, ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement