Advertisement

கால்பந்து உலகக்கோப்பை இந்த அணிகள் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது - லியோனல் மெஸ்ஸி!

ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் பட்டம் வெல்லும் பேவரைட் அணிகளாக இருக்கலாம் என மெஸ்ஸி தெரிவித்துள்ளார். 

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan November 16, 2022 • 10:46 AM
Brazil, France, England are World Cup favourites, says Messi
Brazil, France, England are World Cup favourites, says Messi (Image Source: Google)

உலக கோப்பை கால்பந்து தொடரின் 22ஆவது சீசன் கத்தாரில் வருகிற 20ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் 20ஆம் தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கத்தார்- ஈகுவடார் அணிகள் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன. 

உலகக் கோப்பை தொடரில் தனது தாய் நாடான அர்ஜென்டினா அணிக்காக விளையாட உள்ளார் பிரபல நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி. இதுவே அவர் பங்கேற்று விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடர் என தெரிகிறது. குரூப்-சி பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா அணி சவுதி அரேபியா, மெக்ஸிகோ மற்றும் போலந்து ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் லியோனல் மெஸ்ஸியிடம் இந்த உலக கோப்பையை வெல்வதற்கு யாருக்கு அதிக வாய்ப்புள்ளது என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மெஸ்ஸி,“உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணி என்றால் திரும்ப திரும்ப சில அணிகளின் பெயர்களைதான் நாம் சொல்லி வருகிறோம். பிற அணிகளை காட்டிலும் பிரேசில், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற அணிகள் கொஞ்சம் டாப்பாக உள்ளது. 

ஆனால் உலகக் கோப்பை தொடர் மிகவும் கடினமானது, சிக்கலானதும் கூட. அதனால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். எங்களிடம் ஒரு சிறந்த குழு உள்ளது. அதோடு நாங்கள் மிகவும் ஆர்வமாகவும் உள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement