Advertisement

பேட்மிண்டன்: பட்டம் வென்றனர் யமாகுச்சி, விக்டர் ஆக்சல்சென்! 

உலக டூர் பேட்மிண்டன் தொடரின் மகளிர் பிரிவில் அகானே யமாகுச்சியும், ஆடர் பிரிவில் விக்டர் ஆக்சல்செனும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினர்.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan December 12, 2022 • 11:23 AM
BWF World Tour Finals: Yamaguchi Beats Tai Tzu-Ying To Clinch Women's Singles Title
BWF World Tour Finals: Yamaguchi Beats Tai Tzu-Ying To Clinch Women's Singles Title (Image Source: Google)

உலகின் டாப் 8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான ஜப்பானின் அகானே யமாகுச்சி, சீன தைபேவின் தாய் ஜூ யிங்கை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யமாகுச்சி 21- 18, 22 -10 என்ற நேர் செட்டில் 3 முறை சாம்பியனான தாய் ஜூ யிங்கை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றார். இந்த பட்டத்தை முதல்முறையாக ருசித்த யமாகுச்சிக்கு ரூ.98 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. 

அதபோல் இத்தொடரின் ஆடவர் பிரிவில் 'நம்பர் ஒன்' வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) 21-13, 21-14 என்ற நேர் செட்டில் அந்தோணி சினிசுகாவை (இந்தோனேசியா) வீழ்த்தி சாம்பியன் கோப்பையை தனதாக்கினார்.

இந்த ஆண்டில் அவர் வென்ற 8ஆவது பட்டம் இதுவாகும். இந்த போட்டியில் பங்கேற்ற ஒரே இந்தியரான எச்.எஸ். பிரனாய் முதல் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement