
Cameroon Stun Brazil 1-0 But Fail To Qualify For Knockout As Switzerland Qualify (Image Source: Google)
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஜி பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது. இதில் பிரேசில், கேமரூன் அணிகள் மோதின.
ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் பலன் அளிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 0-0 என சமனிலை வகித்தது.
இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டதி. இதில் கேமரூன் வீரர் வின்சென்ட் அபுபெக்கர் 92ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.