
Challenger Cup: Jeevan - Sriram advance to quarter finals! (Image Source: Twitter)
ஈகுவடாரில் ஆடவருக்கான சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீராம் பாலாஜி ஜோடி , ஈகுவடாரின் ஆன்டனியோ கெயேட்டனோ, பிரேசிலில் ரெய்ஸ் டா சில்வா ஜோடியை எதிர்கொண்டது.
பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியின் முதல் செட்டை இந்திய அணி 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி டா சில்வா இணைக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
அதன்பின் நடைபெற்ற இரண்டாவது செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்ற போதும், இந்திய ஜோடி 7–6 என கைப்பற்றியது.