
ஐரோப்பிய கால்பந்து சம்மேளத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லிவர்பூல் - ரேஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியின் 17ஆவது நிமிடத்தில் ரேஞ்சர்ஸ் அணியின் ஸ்காட் அர்ஃபில்ட் கோலடிக்க, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லிவர்பூல் அணிக்கு ரொபெர்டோ ஃபிர்மினோ ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனிலையில் இருந்தன.
இதையடுத்து இரண்டாம் பாதி ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட லிவர் பூல் அணிக்கு ஃபிர்மினோ(55’), டார்வின் நுனேஸ் (66’) ஆகியோரும் முகமது சாலா ஆட்டத்தின் 75, 80, 81 என அடுத்தடுத்து ஹாட்ரிக் கோல்களை விளாசினார். அதுமட்டுமில்லாமல் ஹார்வி எலியாட் 87ஆவது நிமிடத்தில் கோலடித்தார்.