
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று சென்னையின் எஃப்சி – ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் மோதின. ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜேஆர்டி டாடா விளையாட்டு வளாகத்தில் இப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியின் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோலடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இதில் ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ரித்விக் தாஸ் கோலடித்து அசத்தினார். ஆனால் சென்னை அணி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகின. இதனால் முதல் பாதி ஆட்டம் முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் 56ஆவது நிமிடத்தில் மீண்டும் ரித்விக் தாஸ் கோல் அடிக்க ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. அதன்பின் நம்பிக்கை தளராமல் துடிப்புடன் விளையாடிய சென்னையின் எஃப்சி அணிக்கு 60ஆவது நிமிடத்தில் வின்சி பாரெட்டோ கோலடித்தார்.