
Coco Gauff defeats Emma Raducanu to advance at the Australian Open (Image Source: Google)
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ கஃப், இங்கிலாந்தின் எம்மா ராடுகானுவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை கோகோ கஃப் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் செட்டிலும் அபாரா ஆட்டத்தை வெளிப்படுத்திய கஃப் 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் கோகோ கஃப் 6-4,7-6 என்ற நேர் செட் கணக்கில் எம்மா ராடுகானுவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இத்தோல்வியின் மூலம் எம்மா ராடுகானு இரண்டாம் சுற்றோடு தொடரிலிருந்து வெளியேறினார்.