இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக கிரெக் ஃபுல்டன் நியமனம்!
இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக கிரேக் ஃபுல்டன் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கிரஹாம் ரீட், உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு விலகி இருந்தார். அவருக்கு மாற்றாக அந்த பணிக்கான விண்ணப்பத்தை இந்திய ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டது. இந்நிலையில் இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக கிரேக் ஃபுல்டன் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வரும் 10ஆம் தேதி ஹாக்கி புரோ லீக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 48 வயதான அவர் தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர். பயிற்சியாளராக சுமார் 25 ஆண்டுகால அனுபவம் கொண்டவர். 2014 முதல் 2018 வரையில் அயர்லாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார்.
அதன் பிறகு பெல்ஜியம் ஹாக்கி அணியின் துணை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். இந்த காலகட்டத்தில் 2018 உலகக் கோப்பை தொடர் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது பெல்ஜியம் அணி. தென் ஆப்பிரிக்க அணிக்காக சுமார் 195 போட்டிகளில் 10 ஆண்டு காலம் விளையாடி உள்ளார். வெகு விரைவில் இவர் இந்திய அணியுடன் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now