Advertisement

ரொனால்டோவை வெளியேற்றியது மான்செஸ்டர் யுனைடெட்!

மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேற்றியுள்ளதாக, அந்த அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan November 23, 2022 • 13:04 PM
Cristiano Ronaldo, Manchester United decide to part ways with immediate effect
Cristiano Ronaldo, Manchester United decide to part ways with immediate effect (Image Source: Google)

போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது.இவர் கிளப் போட்டிகளில் கடந்த 2003aஅம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில் விளையாடினார். பின்னர் 2009 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட் ரொனால்டோ , 2018ஆம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

மூன்று ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடிய அவர், கடந்த ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணியால் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது அணியின் பயிற்சியாளருக்கும் ரொனால்டோவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ , தலைமை பயிற்சியாளர் எரிக் டென் குறித்தும், அணியில் தனக்கு செய்யப்பட்ட துரோகம் குறித்தும், ரூனி குறித்தும் வெளிப்படையாக பேசி இருந்தார்.

இதுதொடர்பாக பேட்டியளித்த அவர், “ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என எனக்கு தெரியவில்லை. மேலாளர் எரிக் எனக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை. எனவே, அவருக்கு மரியாதை தர நானும் விரும்பவில்லை. பலருக்கு நான் இந்த அணியில் இருப்பது பிடிக்கவில்லை” என்று மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தப் பேட்டிக்கு பிறகு ரொனால்டோவை உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அணியின் மேலாளர் டெடி ஷெரிங்ஹாம் தெரிவித்தார்.

அதன்படி, தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார். இதனை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப்பை விட்டு வெளியேறுவார் என்று மான்செஸ்டர் யுனைடெட் கிளப் இன்று அறிவித்துள்ளது.

மான்செஸ்டர் அணிக்காக்  விளையாடிய ரொனால்டோவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அணி குறிப்பிட்டுள்ளது. கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கானா அணிக்கு எதிரான போர்ச்சுகலின் தொடக்க ஆட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக ரொனால்டோவின் மான்செஸ்டர் உடனான பயணம் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement