
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் கடந்த 20ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு நடந்த போட்டியில் குரூப் டி பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்தில் ஃபிரான்ஸ் அணி டிஃபென்ஸ்-ல் செய்த தவறை தனக்கு சாததகமாக பயன்படுத்தி ஆஸ்திரேலிய வீரர் கிரெய்க் குட்வின் முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக ஃபிரான்ஸ் வீரர் ஆட்ரியன் ரேபியாட் 27ஆவது நிமிடத்திலும், ஆலிவர் கிரௌட் 32-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர்.
இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கேல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தின் 68ஆவது நிமிடத்தில் ஃபிரான்ஸின் எம்பாப்பேவும், 71ஆவது நிமிடத்தில் ஆலிவர் கிரௌட்டும் கோல் அடித்தனர்.