
Dortmund draw with Sevilla; Maccabi Haifa shock Juventus in UEFA Champions League On Cricketnmore (Image Source: Google)
ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (யுஇஎஃப்ஏ) சர்பாக ஒவ்வொரு ஆண்டும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நடப்பாண்டிற்கான யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டார்ட்மவுண்ட் - செவில்லா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டி தொடங்கிய சிறுது நேரத்திலேயே செவில்லா அணியின் டாங்குய் நியன்ஸூ ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமால ஆட்டத்தின் 35ஆவது நிமிடத்தில் டார்ட்மவுண்ட் அணியின் ஜூட் பெல்லிங்ஹாம் கோலடிக்க, முதல் பாதி ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோலடிக்க கடுமையாக முயற்சித்தனர்.