
England Top Group B After 2-0 Win Over Wales, To Meet Senegal In Knockouts (Image Source: Google)
கால்பந்து உலகக்கோப்பை தொடரின் 22ஆவது சீசன் கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி பிரிவில் நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டு ஆட்டங்கள் ஒரே நேரத்தில் தொடங்கின.
இதில் நடைபெற்ற பி பிரிவு ஆட்டம் ஒன்றில் வேல்ஸ் - இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் எந்த அணிகளும் கோல் அடிக்கவில்லை.
அதன்பின் தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தின் 50ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்டு தமது அணிக்கான முதல் கோலை அடித்தார். அதைத்தொடர்ந்து 51ஆவது நிமிடத்தில் மற்றொரு வீரர் பில் போடன் ஒரு கோல் அடித்து வெற்றி வாய்ப்பை உறுதி செய்தார்.