
நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் குரூப் ‘பி’ சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகள் விளையாடின. இந்த போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள கலீஃபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது.
அதன்படி இங்கிலாந்து அணியின் ஜூட் பெல்லிங்ஹம் ஆட்டத்தின் 35ஆவது நிமிடத்திலும், புகயோ சகா ஆட்டத்தின் 43ஆம் நிமிடத்திலும், முதல் பாதியில் கூடுதல் நேரத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் 45+1ஆம் நீமிடத்திலும் கோலடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 3 - 0 என முன்னிலை வகித்தது ஹேரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணி.
தொடர்ந்து இரண்டாவது பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சகா ஆட்டத்தின் 62ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலடித்தார். அதன்பின் இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஈரான் அணியின் மெஹ்தி டரெமி 65ஆவது நிமிடத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார்.