ஃபிஃபா உலகக்கோப்பை: கேம்ரூனை வீழ்த்தி ஸ்விட்சர்லாந்து வெற்றி!
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் கேம்ரூன் அணியை 1-0 என வீழ்த்தி ஸ்விட்சர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
22ஆவது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையில் அர்ஜெண்டினா, ஜெர்மனி ஆகிய கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்பட்ட பெரிய அணிகள் முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தன.
சிறிய அணியான சவுதி அரேபியா அர்ஜெண்டினாவை தோற்கடித்து சர்ப்ரைஸ் செய்தது. இப்படியாக இந்த உலக கோப்பை தொடர் சுவாரஸ்யமாக நடந்துவருகிறது. இன்னும் பல சர்ப்ரைஸ்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இன்று இரவு கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி கானாவை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து - கேம்ரூன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணி வீரர்களும் சிறப்பாக செயல்பட்டத்தால் முதல் பாதி ஆட்டத்தில் எந்தவித கோலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி லீக் ஆட்டத்தின் 48ஆவது நிமிடத்தி கிடைத்த வாய்ப்பை ஸ்விட்சர்லாந்து வீரர் ப்ரீல் எம்பாலோ கோலாக மாற்றினார். அதன்பின்னர் ஒரு கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை அவர் தவறவிட்டார்.
ஆனால் மறுமுனையில் கேம்ரூன் அணி அடிக்க முயன்ற ஒரு கோலை அபாரமாக தடுத்தார் ஸ்விட்சர்லாந்து கோல்கீப்பர் யான் சோமர். அதன்பின்னர் கேம்ரூன் அணி எவ்வளவோ முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதையடுத்து 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி கேம்ரூன் அணியை விழ்த்தி வெற்றி பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now