
FIFA World Cup 2022 prize money disparity is an obstacle to Equal Pay (Image Source: Google)
உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழா, உலக கோப்பை கால்பந்து தொடராகும். ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர்களைப் போலவே 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.
கடைசியாக உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் 2018ஆம் ஆண்டு நடந்தது. இதில் ஃபிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், 22ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 20ஆம் தேதி கத்தாரில் தொடங்குகிறது.
இத்தொடரானது டிசம்பர் 18ஆம் தேதி வரை 29 நாட்கள் இந்த போட்டி நடக்கிறது. அங்குள்ள 5 நகரங்களில் 8 மைதானங்களில் கால்பந்து திருவிழா நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் நேரடியாக தகுதி பெற்று உள்ளது. மீதமுள்ள 31 அணிகளும் தகுதி சுற்று மூலம் தேர்வு பெற்றன.