
கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆசிய அணிகளின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை சவுதியும், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகளை ஜப்பானும் தோற்கடித்து அதிர்ச்சி அளித்தது. தற்போது இன்று நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணியும், தென் கொரியா அணியும் மோதின.
இதில் குரூப் ஹச் ஆட்டத்தில் 4அணிகளும், ஒரே நேரத்தில் மோதின. போர்ச்சுக்கல் அணி ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால், இன்றைய ஆட்டத்தில் போர்ச்சுக்கல் வென்று இருந்தால், உருகுவே அணிக்கு அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கும். இதனால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த போட்டியில் நிலவியது. இதனையடுத்து, ஆட்டம் தொடங்கியதுமே போர்ச்சுக்கல் ஆதிக்கத்தை செலுத்தியது.
போட்டியின் 5ஆவது நிமிடத்திலேயே போர்ச்சுக்கல் அணி வீரர் ரிகார்டோ முதல் கோல் அடித்தார். இதன் மூலம் போர்ச்சுக்கல் அணி முன்னிலை பெற்றது. இதனையடுத்து, இதனை சமன் செய்யும் முயற்சியில் தென் கொரிய வீரர்கள் ஈடுபட்டனர். போட்டியின் 17 நிமிடத்தில் தென் கொரியா முதல் கோல் அடித்தாலும், அது ஆஃப் சைடு என்று அறிவிக்கப்பட்டது.