
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடரின் 22ஆவது சீசன் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று க்ரூப் ஜி-யில் இடம்பெற்றுள்ள செர்பியா - கேமரூன் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது.
இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் வேட்கையில் தீவிரமாக விளையாடின. ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் கேம்ரூன் வீரர் ஜீன் சார்லஸ் காஸ்டெலெட்டோ முதல் கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டம் முடியப்போகும் நேரத்தில் செர்பியா அணியின் பால்கோவிக் மற்றும் மிலின்கோவிக் ஆகிய இருவரும் அடுத்தடுத்து கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் 2-1 என செர்பியா அணி முன்னிலை வகித்தது.
அதன்பின் நடைபெற்ற 2ஆம் பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் போட்டியின் 53ஆவது நிமிடத்தில் செர்பியா அணி 3ஆவது கோலையும் அடிக்க, 3-1 என வலுவான முன்னிலையில் செர்பியா அணி இருந்தது. இதனால் இப்போட்டியில் செர்பியா அணி வெர்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது.