
FIFA World Cup: Casemiro's Goal Books Last-16 Spot For Brazil (Image Source: Google)
நடப்பு கால்பந்து உலகக் கோப்பை தொடரில் ரவுண்ட் ஆப் 16-க்கு முன்னேறி உள்ளது பிரேசில் அணி. குரூப் சுற்றில் இரண்டாவது வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரேசில் உறுதி செய்தது. சுவிட்சர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது அந்த அணி.
குரூப் ‘ஜி’ பிரிவு ஆட்டத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொண்டன. இரு அணிகளும் களத்தில் கடுமையாக போட்டி போட்டன. பிரேசில் அணி கோல் போடுவதில் மிகவும் தீவிரமாக இருந்தது. ஆனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளாலும் எந்த கோல்களையும் போட முடியவில்லை.
அதன்பின் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தில் பிரேசில் அணியின் கேஸ்மிரோ, 83ஆவது நிமிடத்தில் கோல் போட்டு அசத்தினார். அதன் பிறகும் இரண்டாவது கோலை பதிவு செய்ய முயற்சிகளை மேற்கொண்டது பிரேசில் அணி. ஆனால் அது பலனளிக்கவில்லை.