
FIFA World Cup: Croatia, Morocco settles for a goalless draw (Image Source: Google)
கத்தாரில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் இன்று 'எஃப்' பிரிவில் நடந்த முதல் போட்டியில் மொரோக்கோ - குரோஷியா அணிகள் மோதின. அல் பெய்த் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இரு அணியின் முன்கள வீரர்களும் தொடக்கம் முதலே கோல் அடிக்க கடுமையாக போராடினர்.
இருப்பினும் இரு அணிகளின் கோல் கீப்பர்களான டொமினிக் லிவகோவிக் (குரோஷியா) மற்றும் யாசின் பௌநோ (மொரோக்கோ) தங்களது எதிரணி வீரர்களின் கோல் முயற்சியை பலமுறை அற்புதமாக தடுத்து நிறுத்தினர்.
இதனால் முதல் பாதியில் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்து இருந்த இரு அணியின் ரசிகர்கள் 2-வது பாதி ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் 2ஆவது பாதியிலும் இரு அணி வீரர்களும் இறுதி வரை கோல் அடிக்கவில்லை.