
FIFA World Cup: Kudus' Brace Gives Full Points To Ghana Against South Korea (Image Source: Google)
கத்தாரில் 22ஆவது உலக கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் கானா, தென் கொரியா அணிகள் மோதின.
விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் கானா அணியின் முகமது சாலிசு ஒரு கோலும், 34ஆவது நிமிடத்தில் முகமது குதுஸ் ஒரு கோலும் அடித்தனர். இதனால் முதல் பாதியில் கானா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட தென் கொரியா அணியின் சோ கு சங் இரண்டாவது பாதியில் 58 மற்றும் 61ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை அடித்து ஆட்டத்தின் பரபரப்பை கூட்டினார்.