தங்க காலனியை வென்ற எம்பாப்பே; தங்க பந்துடன் மெஸ்ஸி!
கத்தாரில் நடைபெற்ற 22ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அதிக கோல்கள் அடித்த பிரான் வீரர் எம்பாப்பே தங்க காலணியையும், கோப்பையை வென்ற லியோனல் மெஸ்ஸி தங்க பந்தையும் வென்றனர்.
கத்தாரில் நடைபெற்ற 22ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா ‘பெனால்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
இதன்மூலம் அர்ஜெண்டினா அணி 36 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்றதுடன், 3ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது
இந்த ஆட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஆா்ஜென்டீனாவுக்காக லயோனல் மெஸ்ஸி, டி மரியா ஆகியோரும், பிரான்ஸுக்காக கிலியன் எம்பாபேவும் கோல்கள் அடித்து அசத்தினாா்.
இதன்மூலம் 22ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அபாரமாக விளையாடிய லயோனல் மெஸ்ஸிக்கு சிறந்த வீரர் விருது, சாம்பியன் கோப்பை, தங்கப் பதக்கம் மற்றும் தங்க பந்தும் வழங்கப்பட்டது.
அதேபோன்று அதிக கோல்கள் அடித்த பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பேவுக்கு தங்க காலணியும், சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை அர்ஜெண்டினா அணியின் மார்டினெஸ்க்கும், சிறந்த இளம் வீரருக்கான விருது அர்ஜெண்டினாவின் என்சோ பெர்னாண்டஸ்க்கும் வழங்கப்பட்டது.
Win Big, Make Your Cricket Tales Now