
கத்தாரில் நடைபெற்றுவரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 இல், மொராகோ அணி,யும், ஸ்பெயின் மோதியது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் தடுப்பாட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தி வந்தனர். இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் மாறி மாறி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது கோலாக மாறவில்லை. குறிபபாக ஆட்டத்தின் கடைசி நிமிடத்திலும், கூடுதல் நிமிடத்திலும் தங்களுக்கு கிடைத்த அடுத்தடுத்த ஃபிரி கிக் வாய்ப்பை ஸ்பெயின் வீரர்கள் வீணடித்தனர்.
ஸ்பெயின் வீணடித்தது என்று சொல்வதை விட, பாதுகாப்பு அரணாக நின்ற மொராகோ கோல் கீப்பர் யாசின் தடுத்தார் என்று சொல்வதே சரியாகும். 120 நிமிடங்கள் முடிவில் இரு அணிகளும் கோல் போடவில்லை. இதனால், வெற்றியாளர்களை தீர்மானிக்கு பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.